Aarav & Oviya

Aarav & Oviya : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு தன்னுடைய காதலை உறுதிப்படுத்தியுள்ளார் ஆரவ்.

தமிழ் சினிமாவில் நடிகையாக ஒரு சில படங்களில் நடித்திருந்தவர் ஓவியா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

மேலும் இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ஆரவ்வை காதலித்தார். அப்போது ஆரவ் காதலுக்கு ஓகே சொல்லாததால் மனமுடைந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன. அவ்வ போது இருவரும் சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் நியூ இயர் தினமான இன்று இவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக ஊர் சுற்றியுள்ளனர். அப்போது எடுத்து கொண்ட புகைப்படத்தை ஆரவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் கீழே குறிப்பிட்டுள்ள ஹேஸ்டேக்குகளில் #araviya என்று இருவரின் பெயரையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளதாக அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

Happy New Year everyone!!! Have a wonderful year..hope 2018 ends peacefully now ???????????? #oviya #arav #oviyaarmy #araviya #newyear

A post shared by Arav (@actorarav) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.