Aarav & Oviya

Aarav & Oviya : ஆரவ்வுடன் ஓவியா மீண்டும் நெருக்கமாகியுள்ளார். தற்போது ஆரவ்வின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓவியா கலந்து கொண்டுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஆரவ். மாடலிங் நடிகரான ஆரவ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வாகி இருந்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது ஓவியா ஆரவ்வின் மீது காதல் கொண்டார். அதன் பின்னர் ஆரவ் காதலை ஏற்று கொள்ளாததால் மனமுடைந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதனையடுத்து தற்போது மீண்டும் ஓவியா ஆரவ்வுடன் நெருங்கி பழகி வருகிறார். அவ்வபோது வெளியாகும் புகைப்படங்களே இதற்கு சான்று.

இந்நிலையில் இன்று ஆரவ்விற்கு பிறந்தநாள் என்பதால் அவர் நடித்து வரும் ராஜ பீமா படக்குழுவினர் ஆரவ்வின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தில் ஓவியா, பிந்து மாதவி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள் : 

Aarav & OviyaAarav & Oviya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.