Aamir Khan Home Labours Affected by Corona
Aamir Khan Home Labours Affected by Corona

பிரபல நடிகரின் வீட்டு ஊழியர்களுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

Aamir Khan Home Labours Affected by Corona : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிடுகிடு என உயர்ந்து ஒவ்வொரு நாளும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கிடுகிடுவென பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தைப் போலவே டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. மும்பையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஏற்கனவே சில நடிகர்களின் வீடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் அமீர்கானின் வீட்டு ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனக்கும் உன் அம்மாவுக்கும் இப்படித்தான் கல்யாணம் நடந்துச்சு.. மகனை வைத்துக்கொண்டே ஓபனாக பேசிய ரியாஸ் கான்

இதனையடுத்து இவர்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது. மேலும் தன்னுடைய அம்மாவிற்கு தற்போது பரிசோதனை செய்ய இருப்பதாகவும் அவருக்கும் நெகட்டிவ் என்று முடிவு வரவேண்டுமென விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர்களை உடனே மும்பை மருத்துவ குழு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவ குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.