Ajith

Aadhik Ravichanthrian : 15 நாளில் தல அஜித் என்னை முழு மனிதாக்கி விட்டதாக பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நிமிர்ந்த நன்னடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஷர்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே என பலர் நடித்து வருகின்றனர்.

ரசிகர்களுடன் ரோட்டில் அமர்ந்து போட்டோ எடுத்த தல – வைரலாகும் வீடியோ.!

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று இரவு 9.30 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இதனையடுத்து திரையுலக பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளவர்களும் படத்தை பற்றி ட்வீட் செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடித்து வரும் AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் ட்வீட் செய்துள்ளார்.

8-வது வாரத்தில் விஸ்வாசத்தின் நிலைமை – திரையரங்க உரிமையாளர் ட்வீட்.!

அவரது டீவீட்டில் தல அஜித் என்னை 15 நாளில் முழு மனிதராக்கி விட்டார் என கூறியுள்ளார். மேலும் அஜித், அவரின் மேனஜர் சுரேஷ் சந்திரா மற்றும் வினோத் என அனைவர்க்கும் தன்னுடைய நன்றியையும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.