திருமண அழைப்பிதழ் வாங்கிக் கொண்டு அஜித் சொன்ன வார்த்தை குறித்து பேசியுள்ளார் ஆதி.

Aadhi About Meet With Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆதி. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். மரகத நாணயம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நிக்கி கல்ராணியின் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது.

திருமண அழைப்பிதழ் வாங்கிக்கொண்டு அஜித் சொன்ன வார்த்தை, கல்யாணத்துக்கு வருவாரா? ஆதி அளித்த பேட்டி

இதனையடுத்து அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் இவர் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித்தை சந்தித்து தன்னுடைய திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அப்போது நடந்த சந்திப்பு குறித்து ஆதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பத்திரிக்கை வாங்கிக்கொண்ட அஜித் சார் திருமணத்திற்க்கு பிறகு நடிப்பது குறித்து கேட்டார். அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என கூறினோம். அதற்கு அவர் திருமணத்திற்கு பெண்கள் மாற வேண்டும் என்ற அவசியம் இல்லை அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். ஆனால் வாழ்க்கையில் நல்லபடியாக இருக்கவேண்டும் என கூறினார் என தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு அஜித் சார் வருவாரா என்று கேள்வி எழுப்ப அது தெரியவில்லை என பதிலளித்துள்ளார்.

திருமண அழைப்பிதழ் வாங்கிக்கொண்டு அஜித் சொன்ன வார்த்தை, கல்யாணத்துக்கு வருவாரா? ஆதி அளித்த பேட்டி

நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.