ஆதார் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் கருணாஸ், ரித்விகா, இனியா, அருண் பாண்டியன் என பலரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஆதார். இந்தப் படத்தை ராம்நாத் பழனிக்குமார் இயக்கியுள்ளார். வெண்ணிலா கிரியேஷன் நிறுவனம் படத்தை தயாரிக்க ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

ஆதார் படம் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம்

படத்தின் கதைக்களம் : ஒரு சாதாரண கூலித் தொழிலாளியான கருணாஸ் மனைவி ரித்விகா மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வர திடீரென ஒரு நாள் குழந்தையுடன் ரித்விகா காணாமல் போக பதறிப் போகும் கருணாஸ் போலீசில் புகார் அளிக்கிறார். ஆனால் போலீஸ் அவர் முன்னாள் காதலனுடன் ஓடி விட்டதாக சொல்ல அதனை நம்ப மறுக்கிறார் கருணாஸ். உண்மையில் ரித்விகா காணாமல் போன விஷயத்தில் நடந்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை களம்.

படத்தை பற்றிய அலசல் : ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவாக காட்சிகளில் உருக வைக்கிறார் கருணாஸ். எதார்த்தமான நடிப்பால் நம்மை கலங்க வைக்கிறார். ரித்விகா அவருக்கு ஏற்ற பாணியில் அழகான நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. தேன் மிட்டாய் பாடல் ரசிகர்களை கவர்கிறது.

ஆதார் படம் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம்

சென்னையில் வாழும் சாதாரண குடும்ப மக்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த படத்தில் அழகாக பேசியுள்ளார் இயக்குனர் ராம்நாத். படத்தில் கதை மெதுவாக நகர்வது மட்டும் தான் மைனஸ் ஆக உள்ளது.