Aadai Second Teaser : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Amala Paul, Aadai, Aadai Movie

Aadai Second Teaser :

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் அடுத்து வந்த மைனா இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

இதைதொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த அமலாபால் 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

அடப்பாவிகளா அதுக்குள்ளயா? பிக் பாஸ் குறித்து பிரபல நடிகரின் ஷாக்கிங் ரியாக்ஷன் – புகைப்படத்துடன் இதோ.!

பின்னர் விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்துக்குப் பின்பும் ஹீரோயினாகவே நடித்து வெற்றி பெற்றார்.

இதில் இவர் நடிக்கும் ஆடை படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள்ளாகவே தற்போது இப்படத்தின் இன்னொரு டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரும் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.