Aadai Movie Updates :

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் அடுத்து வந்த மைனா இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

இதைதொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த அமலாபால் 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்.!.

பின்னர் விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்துக்குப் பின்பும் ஹீரோயினாகவே நடித்து வெற்றி பெற்றார்.

இதில் இவர் நடிக்கும் ஆடை படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மொத்தம் இந்த காட்சிகளை 20 நாட்கள் எடுத்துள்ளார்களாம். இதற்காக 20 நாட்கள் அமலா பால் ஆடையில்லாமல் நடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், இந்த காட்சியை தூக்கிவிட்டனர். மேலும் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.