A.R.Rahman in Independence Day Song
A.R.Rahman in Independence Day Song

A.R.Rahman in Independence Day Song : சுகந்திர திருநாளை முன்னிட்டு ஏ.ஆர். ரகுமான் மற்றும் 65 பாடகர்களுடன் இணைந்து தமிழா தமிழா என்ற பாடலை உருவாக்கியுள்ளார்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் 28 ஆண்டுகால இசை பயணத்தில் பிரபலமான பாடல்களை வைத்தே இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த குழு அறிவித்துள்ளது.

இந்த பாடலை 65 பாடகர்கள் ஒருங்கிணைந்து வீட்டில் இருந்தபடியே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்திபோன்ற ஐந்து மொழிகளிலும் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த ‘டுகெதர் அஸ் ஒன்’ பாடலை ஸ்ரீனிவாசுடன் இணைந்து ராகுல் நம்பியார் மற்றும் ஆலாப் ராஜு ஆகியோர் வடிவமைத்துள்ளனர். இந்த் வீடியோ லிட்பாக்ஸ் மீடியாவால் தொகுக்கப்பட்டுள்ளது.

இதனை பின்னனி பாடகர் ஶ்ரீநிவாஸ், யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த பாடலை உருவாக்கியதற்கான நோக்கம் என்னவென்றால், கொரோனா காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த பாடகர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இதனை உருவாக்கியுள்ளனர்.

இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அதன் மூலம் கிடைக்கும் நிதி தொகையை கொண்டு அவர்களுக்கு உதவ முடியும் என்ற எண்ணத்துடன் செயல்படுகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் இதைத்தொடர்ந்து ஆன்லைனிலும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும் தெரிகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.