லாரன்ஸின் துர்கா படத்தை பங்கமாக கலாய்த்துள்ளார் மாஸ்டர் பட பிரபலம்.

A Rathnakumar Trolls Durga Poster : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் டான்சர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். போதும்டா சாமி என பலரும் அலுத்துக் கொள்ளும் வகையில் பேய் படங்களை இயக்கி புகழ் பெற்றவர்.

ஒலிம்பிக் திருவிழா : கொலைவெறித் தாக்குதலில், மாணவி உள்பட 10 பேர் காயம்..

இவரது நடிப்பில் அடுத்ததாக சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் துர்கா, ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

லாரன்ஸின் துர்கா படத்தை பங்கமாக கலாய்த்த மாஸ்டர் பட பிரபலம் - வைரலாகும் ட்வீட்

துர்கா படத்தில் இருந்து சமீபத்தில் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. முகத்தை மிக அருகில் வைத்து செல்பி எடுப்பதை போல அந்த புகைப்படம் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் ஸ்க்ரிப்ட் ரைட்டரும் மேயாத மான், ஆடை படத்தை இயக்கிய ஏ ரத்னகுமார் ஸ்னாப்ஷாட்டின் புதிய பில்டர் என கமெண்ட் அடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி பங்கமாக கலாய்த்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘நாங்க வேற மாரி’ பாடல் இப்படித்தான் Start ஆச்சு – Yuvan Opens Up..!