துப்பாக்கி படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது விஜய் இல்லை என பேசியுள்ளார் முருகதாஸ்.
A R Murugadoss About Thuppakki Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் முருகதாஸ். தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தடம் பதித்தார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களை இயக்கிய இவர் தளபதி விஜய்யை வைத்து கத்தி துப்பாக்கி சர்க்கார் என மூன்று படங்களை இயக்கினார்.
நான்காவது முறையாக மீண்டும் இந்த கூட்டணி தளபதி 65 படத்திற்காக இணைய இருந்தது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு திருப்தி அளிக்காததால் அவர் தன்னுடைய அடுத்த பட வாய்ப்பை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு வழங்கினார்.
இந்த நிலையில் முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் துப்பாக்கி படம் பற்றி பேசிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விஜயின் கால்ஷீட் ஃப்ரீயாக இருக்கிறது என தன்னை அழைத்து துப்பாக்கி படத்தை இயக்குமாறு கூறியதாக முருகதாஸ் தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்னொரு பேட்டி ஒன்றில் முதன்முதலில் இந்த படத்தை மகேஷ்பாபுவை வைத்து தான் இயக்கி இருந்தேன் என தெரிவித்திருந்தார்.
இன்னொரு பேட்டி ஒன்றில் துப்பாக்கி படத்தை முதன்முதலாக அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் இயக்க திட்டமிட்டு இருந்ததாக கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்களே குழம்பிப் போயுள்ளனர். துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் மகேஷ் பாபுவா? அட்சயகுமாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.