சர்தார் 2 படத்தில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் சர்தார் என்ற திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது.
இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் இனைவுவதாக படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மாளவிகா மோகனன் அந்தப் பதிவை தனது twitter பக்கத்தில் வெளியிட்டு “எனது பிறந்தநாள் வாரத்திற்கான சிறந்த தொடக்கம் எனவும், எனது அடுத்த திட்டத்தை தமிழில் அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி! இது மட்டும் இல்லாமல் இந்த அருமையான குழுவுடன் இதை தொடங்குவதற்கு காத்திருக்க முடியாது”..!
என பதிவு செய்து உள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.