வாரிசு திரைப்படத்தில் விஜயின் நண்பர்களில் ஒருவரான ஸ்ரீமான் இப்படத்தில் இணைந்துள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

தெலுங்கு இயக்குனர் வம்சி படைபள்ளி தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் வாரிசு. இதில் கதாநாயகனாக நடிகர் விஜய் நடிக்க ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர்.

வாரிசு படத்தில் இணைந்துள்ள புதிய பிரபலம்!! - யார் தெரியுமா?? அவர் வெளியிட்டுள்ள பதிவு வைரல்!.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் நீண்ட இடைவேளைக்குப் பிறகு குடும்ப கதையம்சம் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ஆர்வமாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஏற்கனவே பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீமான் இந்த படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாரிசு படத்தில் இணைந்துள்ள புதிய பிரபலம்!! - யார் தெரியுமா?? அவர் வெளியிட்டுள்ள பதிவு வைரல்!.

மேலும் இது தொடர்பாக ’வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் விஜய் உடன் ஸ்ரீமான் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் ஸ்ரீ மானும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.