Adichi Thookku Single Track From Viswasam
Adichi Thookku Single Track From Viswasam

Adichi Thookku Viswasam : தல ரசிகர்களுக்கு இன்று செம கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது நிச்சயம் ரசிககர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், விவேக், யோகி பாபு ஆகியோருடன் சேர்ந்து விஸ்வாசம் படத்தில் படத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகலாம் என நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் தற்போது இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது, சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டுள்ள டீவீட்டில் இன்று மாலை 7 மணிக்கு இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதனால் தல ரசிகர்களுக்கு இன்று செம கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பது உறுதியாகி உள்ளதால் தற்போதும் இருந்தே கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.