Prem Kumar

Prem Kumar : 96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்

96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார்.

இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், ‘இந்த கதை என்னுடையது தான்.

இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில்‘96’என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்கு பிற்கு தயாரிப்பாளர் நந்தகோபாலிடமும் சொன்னேன்.

அவர் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிய பிறகு தான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன். அதில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அதன் போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.

இந்த படத்தின் டைட்டில் 96 என்று வைத்து டிசைன் செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும் வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்ட்து. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.

படம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார்.

அதனையடுத்து சுரேஷ் என்பவர் இந்த கதை என்னுடையது என்றும், இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன் என்றும், அவர் தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

ஆனால் இது என்னுடைய கதை தான் எனவும் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.