96 Movie :
ஒரு வழியாக 96 படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தில் ஜானுவை கட்டி பிடித்தார் ராம். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் 96.
SK 13 படத்திற்கு Mr. லோக்கல் தலைப்பு ஏன்? – இயக்குனர் ராஜேஷ் விளக்கம்.!
பள்ளி பருவ காதலை பேசும் படமாக உருவான இந்த படத்தில் ராமாக நடித்திருந்த விஜய் சேதுபதி ஒரு இடத்தில் கூட தன்னுடைய காதலியான ஜானுவை கட்டி பிடிக்க மாட்டார்.
இந்த காட்சியில் கட்டி பிடித்து விடுவார், அந்த காட்சியில் கட்டி பிடித்து விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமார்ந்து தான் போனார்கள்.
அந்த அளவிற்கு படம் முழுவதை ஒரு வித எதிர்பார்புடனேயே கொண்டு சென்றிருந்தார் பிரேம்.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
அந்த கொண்டாட்டத்தில் விஜய் சேதுபதி த்ரிஷாவை கட்டி அணைத்து அன்பை பரிமாறி கொண்டார். இதனை பார்த்த ரசிகர்களோ இது தான் ரியல் க்ளைமேக்ஸ் என கூறத் தொடங்கி விட்டனர்.