96 Vs 87 Love

96 Vs 87 Love : 96 காதலுடன் போட்டி போட வருகிறது 87 காதல். இந்த இரண்டில் ஜெயிக்க போவது எது? இளமை காதலா? முதுமை காதலா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தாதா 87. மார்ச் 1 தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை கலை சினிமாஸ் கலைச் செல்வன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. லேண்டர் லீ மார்ட்டி இந்த படத்திற்கு இசையமைக்க, ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிரஞ்சன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இப்படம் முழுக்க முழுக்க கமல்ஹாசனின் சத்யா திரைப்படத்தை கொண்டும் 87 காதலை மையமாக கொண்டும் உருவாகியுள்ளது.

அதிலும் வயதானர்களின் காதலை பற்றி பேசியுள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்திருந்த 96 என்ற திரைப்படம் பள்ளி பருவ காதலை பற்றி பேசி இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது இப்படம் 87 காதலை பேச வருகிறது. 96 படத்தின் காதல் கதையை தாதா 87 காதல் கதை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

தாதா 87 படத்தின் டீஸர், ட்ரைலர், பாடல்கள், போஸ்டர்கள் என இதுவரை வெளியாகியுள்ள அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.