Thalapathy 64
தளபதி விஜய் நடித்து வரும் படம் தளபதி 64. இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் 96 படத்தின் நடித்த நடிகை ஒருவர் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதை தொடர்ந்து இடைவிடாமல் தளபதி விஜய் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

இ‌ந்த படத்தில் இதுவரை ரசிகர்கள் பார்க்காத விஜய்யை பார்ப்பார்கள் என்று இயக்குனர் தெரிவித்து இருக்கிறார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஜோடியாக மாளவிகாவும் நடிக்க உள்ளார்கள்.

மேலும், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீ ராம், ஆண்டனி போன்ற பெரிய நடிகர் பட்டாளமே உள்ளது. தற்போது மேலும் ஒரு நடிகை இந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் சின்ன வயசு ஜானுவாக நடித்த ஜானு தளபதி 64 – ல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

96 Jaanu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.