90களில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்கள் பலர் உண்டு, அவர்களில் ஒருவர் தான் விஷால் சுந்தர்.

சன் டிவியில் ஒளிபரப்பான ராசிபலன் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ராசிக்கும் அதற்கான பலன்களை சொல்லி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பல வருடங்களாக திரையில் தலை காட்டாமல் இருந்து வரும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இன்னமும் உங்களுடைய அழகு கொஞ்சம் குறையல என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.