Super Deluxe

90 Ml Vs Super Deluxe : நாங்க மட்டும் தே***வா? ஆனால் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிச்சவங்க எல்லாம் நல்லவர்களா? என பெண் இயக்குனர் கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்,

தமிழ் சினிமாவில் 90 ml திரைப்படத்தை இயக்கி பெரும் சர்ச்சைக்கு உள்ளானவர் அனிதா உதீப். இந்த படத்தில் ஆபாச வசனங்கள், காட்சிகள், மது, சிகிரெட் என இருந்ததால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

படத்தை பார்த்த பலரும் இந்த படக்குழுவினரை ஆபாசமாக திட்டி தீர்த்து வந்தனர். தற்போது சூப்பர் டீலக்ஸ் திரைப்படமும் அதே பாணியில் தான் உருவாகியுள்ளது. ஆனால் அவர்களை யாரும் திட்டவில்லை என இயக்குனர் அனிதா உதீப் கோபமாக டீவீட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அந்த டீவீட்டில் நாங்க பண்ணா மட்டும் தப்பு, அதுவே ஆண்கள் பண்ணா சரியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் எங்களை தே என திட்டியவர்கள் தற்போது எங்கே சென்று விட்டீர்கள் எனவும் அந்த டிவீட்டல் கேட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எந்த படத்தை எந்த படத்தோட கம்பேர் பண்றீங்க? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.