90 ml

90 ml Trailer : 90 ml படத்தின் ட்ரைலரை பார்த்த தயாரிப்பாளர் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என கொந்தளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த நடிகையான ஓவியா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தற்போது அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் 90 ml திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருந்தது. முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி காட்சிகள் என இடம் பெற்று இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனையடுத்து தற்போது பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான தனசெழியன் இந்த மாதிரி படங்கள் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என கோபமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.