90 ml trailer

90 ml Trailer : 90 ml படத்தின் ட்ரைலர் குறித்த சர்ச்சைக்கு ஓவியா கூலாக டபுள் மீனிங்கில் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து முன்னணி நடிகையாக போராடி வந்தவர் ஓவியா.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோடான கோடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடித்த சிலுக்குவார் பட்டி சிங்கம் என்ற படத்தில் மட்டும் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திலும் அவருக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை.

மேலும் ஓவியா இது பிக் பாஸ் செல்வதற்கு முன்பு நடித்த திரைப்படம் எனவும் பதிலளித்திருந்தார். இதனையடுத்து 90 ml திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் மிகவும் ஆபாசமாகவும் இரட்டை அர்த்த வார்த்தைகள் நிறைந்ததாகவும் இருந்ததால் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது.

இதனால் பலரும் ஓவியாவை விமர்சனம் செய்ய அதற்கு ட்விட்டரில் கூலாக பதிலளித்துள்ளார். பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள் எதையும் படத்தை பார்த்து விட்டு பேசுங்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.