அஜித் தொடர்ந்து வலிமை கதையில் மாற்றம் செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து வினோத் நடிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
எச். வினோத்தின் சொந்த கதையான இந்த படத்தில் அஜித் கிட்டத்தட்ட 9 மாற்றங்களை செய்திருப்பதாக இதனால் வினோத் கொஞ்சம் அப்செட்டானதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
மேலும் தன்னுடைய குடும்ப ஞாபகம் வந்து விட்டதாலே வலிமை ஷூட்டிங் ஹைதராபாத்தில் இருந்து அஜித் சென்னைக்கு மாற்ற சொல்லி விட்டதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி தீரன் படத்தை போலவே இந்த படமும் செம ட்விஸ்ட்களை கொண்ட பக்கா மாஸ் படமாக இருக்கும் என்கின்றனர்.