8 Days Collection of Maanadu

இன்னும் சில தினங்களில் கர்ணன் படத்தின் மொத்த வசூல் சாதனையை முறியடித்து மாநாடு திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 Days Collection of Maanadu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாநாடு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது வரை வெற்றிநடை போட்டு வருகிறது. மூன்றே நாளில் படத்தின் பட்ஜெட்டை எடுத்த மாநாடு வசூல் தற்போது லாபம் மழையில் நனைந்து வருகிறது.

பவானி கூடுதுறையில் பரிகார பூஜை : பொதுமக்களுக்கு அனுமதி

முதல் வார முடிவில் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருந்த மாநாடு திரைப்படம் எட்டு நாள் முடிவில் 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதனால் 70 கோடியுடன் 2021-ல் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்டில் நான்காவது இடத்தில் இருக்கும் கர்ணன் திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தையாக மாறி மனைவியுடன் ஷாப்பிங் செய்த KPY Vinoth 💞 Iswarya | Saravana Stores Elite Diamond 💎

தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருவதன் காரணத்தினால் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.