அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 COVID19 Possitive Cases in Annathae Shooting Spot : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரானா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த், நயன்தாரா என பல நடிகர், நடிகைகள் இந்த படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 8 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கொரானா தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இருப்பினும் அவர் சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.