70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் விருதுகள் அறிவிக்கப்படுவது முக்கியமான ஒன்று. அந்த வகையில் எழுவதாவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த படங்கள் மற்றும் எந்த நடிகர் ,நடிகைகள் என்று இந்த பட்டியலில் பார்க்கலாம்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன் 1” சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும், சிறந்த பின்னணி இசைக்காக ஏ ஆர் ரகுமானும் தேர்வாகியுள்ளனர்.
சிறந்த கன்னட திரைப்படத்திற்கான விருதுக்கு கே ஜி எஃப் 2 தேர்வாகியுள்ளது.
சிறந்த மலையாள படத்திற்கான விருதுக்கு “சவுதி வெள்ளைக்கா” என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்த “நித்யா மேனன்”சிறந்த நடிகைக்கான விருதுக்கும் ஜான் மாஸ்டர் சிறந்த நடனத்திற்கான விருதுக்கும் தேர்வாகியுள்ளனர்.