70 Crore Plans to Kallakurichi
70 Crore Plans to Kallakurichi

70 Crore Plans to Kallakurichi : கள்ளக்குறிச்சிக்கு ரூபாய் 70 கோடி மதிப்பில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக மதுரை, தென்காசி, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் அம்மாவட்ட வளர்ச்சிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அடிக்கல் நாட்டினார்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்காக ரூபாய் 70 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

நெல்லையில் 196.75 கோடி மதிப்பிலான திட்டங்கள், மதுரைக்கு ரூபாய் 1200 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் – முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

மேலும் கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையின் துரித நடவடிக்கைகளால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரானா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனையின் தரத்தை உயர்த்த ரூபாய் 1.57 கோடி செலவில் சிடி ஸ்கேன் மையம் நிறுவப்படும் என தெரிவித்தார். மேலும் தனியார் மருத்துவமனை தரத்திற்கு நிகராக அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.

விவசாயிகளையும் மகளிர் குழுக்களை சந்தித்த முதல்வர் ஏரிகளில் இருந்து பெறப்படும் வண்டல் மண் முழுமையாக விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இதனால் உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

e-NAM நிறுவுவதற்காக 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரிஷிவந்தியத்தில் அரசு கலைக் கல்லூரியை உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதாக மருத்துவ கல்லூரி கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், 42,698 வீடுகளுக்கு குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டன, மேலும் நீர் சேமிப்பைப் பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் தடுப்பணைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.