சைமா விருதுகள் விழாவில் ஒரே அடியாக 7 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது சூரரைப்போற்று திரைப்படம்.

7 SIIMA Awards for Soorarai Potru : தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி நியமனம் செல்லும் : ஐகோர்ட்

ஒரே அடியாக 7 விருதுகளை தட்டிச் சென்ற சூரரைப்போற்று திரைப்படம்.. சூர்யா ரசிகர்கள் செமக் கொண்டாட்டம்.!!

படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியையும் பெற்றது. மேலும் ஏற்கனவே இந்த படம் பல்வேறு விருதுகளை வென்றுள்ள நிலையில் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற சைமா விருதுகள் விழாவில் 7 விருதுகளை வென்றுள்ளது.

அதாவது சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த திரைப்படம் என மொத்தம் 7 விருதுகளை சூரரைப்போற்று திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

கோவிலில் விவாகரத்து குறித்து கேட்ட செய்தியாளர் – கடுப்பாகி சீறிய Samantha! | Latest Cinema News