7.5 Percent Medical Sheet Allocation Uses

7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் அடுத்த ஆண்டு முதல் 435 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

7.5 Percent Medical Sheet Allocation Uses : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொண்டு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெறுவது என்பது கடினமான ஒன்றாக இருந்து வருகிறது.

மத்திய அரசின் நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்காக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.

இந்த இட ஒதுக்கீடு முறை இந்த ஆண்டே அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பயன் அடைந்தனர். மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவ மாணவிகளின் கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் அடுத்தாண்டு 435 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். நான் அரசுப் பள்ளியில் படித்தவன் என்பதால் இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன் பேசியுள்ளார்.

மேலும் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் ரூபாய் 26.52 கோடி செலவில் 14 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து ரூபாய் 129.34 கோடி மதிப்பீட்டில் 21,504 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.