67 ஆவது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் விருது பெற்றோரின் முழு விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா துறையில் இருக்கும் அனைவரையும் ஆண்டுதோறும்கௌரவப்படுத்தி வரும் முக்கியமான விருதுகளில் ஒன்றாக திகழ்பவது தான் ஃபிலிம் ஃபேர் விருதுகள். இந்த விருது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், சிறப்பான திறமையை வெளிப்படுத்திய திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் விழா, நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் திரைக்கு வந்த படங்களில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் விருது பெற்றிருக்கும் தமிழ் படங்களின் முழு விவரம் காண்போம்.

தமிழ் திரையுலக வெற்றியாளர்கள் :

சிறந்த நடிகர் (ஆண்) – சூர்யா (சூரரைப் போற்று)

சிறந்த நடிகர் (பெண்) – லிஜோமோல் ஜோஸ் (ஜெய் பீம்)

சிறந்த படம் – ஜெய் பீம்

சிறந்த இயக்குனர் – சுதா கொங்கரா

சிறந்த துணை நடிகர் (ஆண்) – பசுபதி (சர்ப்பாட்டா பரம்பரை)

சிறந்த துணை நடிகர் (பெண்) – ஊர்வசி (சூரரைப் போற்று)

சிறந்த இசை ஆல்பம் – ஜி.வி. பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) – கிறிஸ்டின் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா- ஆகாசம் (சூரரைப் போற்று)

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) – தீ (காட்டு பயலே-சூரரை போற்று)

சிறந்த நடன கலைஞர் – தினேஷ் குமார் – வாத்தி கம்மிங் (மாஸ்டர்)

சிறந்த ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி (சூரரைப் போற்று).