6000 Job Opportunity in Tamil Nadu
6000 Job Opportunity in Tamil Nadu

6000 Job Opportunity in Tamil Nadu : தனியார் துறையில் எங்கெங்கு எவ்வளவு வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளும் வகையிலும் அந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் வகையிலும் புதிய இணையதளம் ஒன்றை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

இந்த இணையதளத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை என தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இதுவரை இந்த இணையதளத்தில் 6000 வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Ashok Leyland உள்ளிட்ட பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் பற்றி தகவல்களை இந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் 400 முதலாளிகள் இந்த இணைய தளத்தில் தங்களது நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

காரசாரமாக நடந்த வாக்குவாதம்.. லைவ் வீடியோவில் அர்னாப்புக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி – டிரெண்ட் செய்து பாராட்டும் ரசிகர்கள் (வீடியோ)

4000 முதல் 50,000 வரையில் சம்பளத்தை வழங்க வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்திலுள்ள பல்வேறு இளைஞர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்புகளை தேர்ந்தெடுத்து பயனடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 25 ஆயிரம் பேர் இந்த இணையதளத்தின் மூலமாக வேலை தேடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இணையதளம் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு பெரிய அளவில் உதவி வருவதாகவும் கூறப்படுகிறது.