
5th ODI : இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய மே.தீ., அணிக்கு எதிரான போட்டியில் மே.தீ., அணி டாஸ்க் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டமே இந்திய அணி பிரமாதமாக அமைந்தது. மே.தீ., அணியில் மட்டும் இருவர் மாற்றப்பட்டனர். ஹேம்ராஜ், ஆஷ்லே நீக்கப்பட்டு ஒஷானே தாமஸ் மற்றும் தேவேந்திர பிஷீ சேர்க்கப்பட்டனர்.
இந்தியாவிர்க்கு அற்புதமாக அமைந்தது என்றால் மே.தீ., அணிக்கு அது மோசமான நிலை என்றே அர்த்தம்.
ஏனென்றால் மே.தீ., அணியின் தொடக்க ஆட்டக்காரர் முதல் பந்திலேயே அவுட் ஆகவே பெருத்த ஏமாற்றத்துடனே அந்த அணி களம்இறங்கியது.
பாவெல், ஹோப் இருவரும் டக் அவுட்டகினர். மேலும் சாமுவேல்ஸ் 24 ரன் எடுதார். ஹெட்மயர் 9 ரன் மட்டுமே எடுதார்.
மொத்தமாக மே.தீ., அணி 31.5 ஓவர்களில் 104 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகினர்.
இந்தியா எளிதாக வென்று விடும் என்று எல்லோருக்கும் தெரிந்த நிலையில் தவான் சற்றும் எதிர் பாராத விதத்தில் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய கோலி மற்றும் ரோகித் ஜோடி இணைந்து ஆட்டத்தை முடித்தனர். இதில் ரோகித் அரை சதம் விளாசினார்.
இந்தியா சார்பில் ஜடேஜா அதிகபச்சமாக 4 விக்கெட் எடுதார். கடைசியில் இந்தியா 15 ஓவர் முடிவில் 105 ரன் எடுத்து ஆட்டதை முடித்தனர்.
மேலும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வி அடைந்தும் மற்றும் ஒரே ஒரு போட்டியில் தோல்வி அடைந்தும் இத்தொடரை வெற்றி பெற்றது இந்திய அணி.