
SabariMala Iyappan : சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி உள்ளது.
இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வர விருப்பம் தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.
அதையடுத்து முதன் முறையாக கடந்த மாதம் கோவில் நடை திறக்கும்போது பெண் பத்திரிக்கையாளர் மற்றும் பெண் செயற்பாட்டாளர் இருவர் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் போராட்டகாரர்களால், தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால், தொடர் போராட்டம், தடியடி, ஆர்பாட்டம் என சபரிமலையே போரட்டகளமாகியது.
இதைதொடர்ந்து நவம்பர் மாதத்தில் மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போதும், பெண்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் சபரிமலை.காம் என்ற இணையதள பக்கத்தில் கேரள உள்ளிட்ட தென் இந்தியா மாநிலங்களில் உள்ள 10 முதல் 50 வயதிற்குட்பட்ட 550 பெண்கள் ஐயப்பனை தரிசிக்க விரும்புவதாக விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து பினராயி கூறுகையில், ” எந்தவொரு விஷயத்தை செய்யும்போதும் எதிர்கட்சிகள் இவ்வாறு செய்வதென்பது இயல்பான ஒன்றே.
ஆனால் இம்முறை இதற்காக நாங்கள் பின் வாங்க போவதில்லை. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவார்கள் ” என தெரிவித்தார்.