50 Days to Go Ajith Birthday

தல அஜித்தின் பிறந்த நாளுக்கு இன்னும் 50 நாள் மட்டுமே இருப்பதாக தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

50 Days to Go Ajith Birthday : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படம் நல்ல ஒரு வெற்றியை பெற்றது. பிங்க் படத்தின் ரீமேக்காக உருவான இந்த திரைப்படத்தை வினோத் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இப்படியான நிலையில் தற்போது தல அஜித் ரசிகர்கள் அஜித்தின் பிறந்த நாளுக்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இதனால் ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் #50DaysToTHALA50Festival என்ற டேக் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

Attachments area