50 chickens for 77 thousand women
50 chickens for 77 thousand women

50 chickens for 77 thousand women – 77 ஆயிரம் ஏழை பெண்களுக்கு 50 கோடி ரூபாய் செலவில் நாட்டுக்கோழி வழங்கும் திட்டம்: முதல்வர் துவக்கி வைத்தார்!

சென்னை: ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 கோடி மதிப்பில் 77 ஆயிரம் பெண் பயனாளிகளுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று துவக்கி வைத்தார்.

அனைத்து மாவட்டங்களிலும் பெண் பயனாளிகளுக்கு, தலா 50 கோழிகள் ரூ.25 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தமிழக அரசு, கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.25 கோடியை ரூ.50 கோடியாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் கிராமப்புற ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில், கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 50 கோடி ரூபாய் செலவில், 77,000 கிராமப்புற பெண் பயனாளிகளுக்கு,

தலா 50 நாட்டுக்கோழி, விலையில்லா நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக் கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கப்பட்டன.

இந்த நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் 5 பெண் பயனாளிகளுக்கு நாட்டுக் கோழிகள் மற்றும் கூண்டுகளை வழங்கி துவக்கி வைத்தார்கள்.

இந்த திட்டத்தை நிறைவேற்றிட ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் அருகாமையில் உள்ள 4 அல்லது 5 கிராமங்களில் உள்ள பயனாளிகள் ஒரு குழுவாக அமைக்கும் வகையில் தேர்வு செய்யப்படுவர்.

இவ்வாறு அருகருகே உள்ள கிராமங்களை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைப்பதால் அக்குழுவிற்கு தேவையான தீவனம் போன்ற பொருட்களை கொள்முதல் செய்வதற்கும்,

கோழி வளர்ப்பின் மூலம் பெறப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதும் எளிமையாகிறது.

மேலும் ஒரு பயனாளிக்கு நான்கு வார வயதுடைய 50 எண்ணிக்கை அசில் இன கோழிகள் – சேவல் மற்றும் பெட்டை சரிவிகிதத்தில் வழங்கப்படுவதால், அடுத்த 16 வாரத்தில் 20 சேவல்களை விற்று வருவாய் ஈட்டலாம்.

மீதமுள்ள 25 பெட்டை மற்றும் 5 சேவல்களை பராமரிப்பதன் மூலம், இனப்பெருக்கத்திற்கு உகந்த முட்டைகளை உற்பத்தி செய்து,

அதன்மூலம் அதிக கோழிகளை உற்பத்தி செய்து, நிலையான வாழ்வாதாரத்தை பெற வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய பெண்கள் பலன் பெறுவதோடு, வருமானமும் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.