5 Years of 24 Movie

இன்னையோட 5 வருஷம் ஆச்சு என ட்ரெண்டிங்கில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

5 Years of 24 Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று 24.

விக்ரம் குமார் இயக்கத்தில் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் திரைக்கு வந்து இன்றோடு 5 வருடங்கள் முடிவடைந்தது. இதனால் சூர்யா ரசிகர்கள் #5Yearsof24 என்ற ஹாஸ்டேக் உருவாக்கப்பட்டு கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.