
T20 India : மே.தீ., அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி அடைந்தது.
முதலில் களம் இறங்கிய மே. தீ ., அணி 109 ரன் மட்டுமே எடுத்து ஆள் அவுட் ஆனது. இந்திய அணி பந்து வீச்சாளர் யாதவ் அபாரமாக பந்து வீசி அவரின் ஓவரில் 13 ரன் மட்டுமே கொடுத்தார்.
மேலும் 3 விக்கெட் வீழ்த்தினார்.மற்றும் கலீல்,பும்ரா,க்ருணால் பாண்டியா ஆகியோரும் தங்களில் பங்குக்கு தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதனால் தொடக்காதில் இருந்தே மே.தீ., அணி சரிவிலே இருந்தது, எளிதில் வெற்றி பெற கூடிய இலக்காக இருந்தாலும் மே.தீ., அணி அதனை எளிதாக அடைய விடவில்லை.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டகாரர் மற்றும் தொடக்க வீரரான ரோகித் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனை அடுத்து களம் இறங்கிய மற்ற வீரர்களை சொற்ப ரன்களில் அவுட் செய்தனர் மே.தீ., அணியின் பந்து வீச்சாளர்கள்.
இந்திய அணியின் மற்றொரு நச்சதிர ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக், அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
தினேஷ் கார்த்திக் மற்றும் பாண்டியா ஜோடி சேர்ந்து இந்திய அணியை வெற்றி பெற செய்தனர்.
1 சிக்சர் ,3 பவுண்டரிகள் என தினேஷ் ஒரு பக்கம் ரன் எடுக்க, மறு பக்கம் 3 பவுண்டரிகள் என க்ருணால் பாண்டியா தன் பங்குக்கு ரன் சேர்த்து தினேஷ்க்கு பக்க பலமாக இருந்ததார்.
இறுதியில் தினேஷ் மற்றும் க்ருணால் பாண்டியா ஆட்டமிழக்காமல் இருதனார். 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 110 ரன் எடுத்து வெற்றி பெற்றது இந்திய அணி.