பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மிகவும் குறைவான சம்பளம் வாங்கிய ஐந்து நடிகர்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன்.

கல்கியின் நாவலை தழுவி உருவான இந்த படத்தை பலர் எடுக்க முயற்சி செய்த நிலையில் முடியாமல் போனது. இதனை மணி ரத்தினம் படமாக எடுக்கவே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகவே இருந்து வந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை முதல் பாகம் பூர்த்தி செய்திருந்த நிலையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

இந்த நேரத்தில் இப்படத்தில் நடிப்பதற்காக மிக மிக குறைந்த சம்பளம் வாங்கிய ஐந்து நடிகர் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் யார் யார் அவர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  • 1. நடிகர் பிரபு – ரூ 1.5 கோடி
  • 2. பிரகாஷ் ராஜ் – ரூ 1.5 கோடி
  • 3. ஐஸ்வர்யா லட்சுமி – ரூ 1.5 கோடி
  • 4. ஜெயராம் – ரூ 1 கோடி
  • 5. சோபிதா துலிபாலா – ரூ 1 கோடி