ஐந்து நாளில் வாரிசு திரைப்படம் 150 கோடி வசூல் செய்துள்ள நிலையில் துணிவு வசூல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் துணிவு.

ஐந்து நாளில் வாரிசு 150 கோடி வசூல்..‌‌ துணிவு வசூல் எவ்வளவு தெரியுமா? - வெளியான பரபர தகவல்

துணிவு படத்துடன் போட்டியாக விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் 5 நாளில் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஐந்து நாளில் வாரிசு 150 கோடி வசூல்..‌‌ துணிவு வசூல் எவ்வளவு தெரியுமா? - வெளியான பரபர தகவல்

இப்படியான நிலையில் துணிவு படம் ஐந்து நாளில் உலகம் முழுவதும் ஐந்து நாளில் ரூபாய் 175 கோடி தாண்டி வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர். மேலும் துணிவு விரைவில் 200 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.