பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் முதல் ஐந்து போட்டியாளர்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. ஆறாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் முதல் ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தான்? இணையத்தில் லீக்கானது லிஸ்ட்

இப்படியான நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 5 போட்டியாளர்கள் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

முதல் போட்டியாளராக ரக்சன் பங்கேற்க உள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் இரண்டாவது போட்டியாளராக டி இமான் அவர்களின் முன்னாள் மனைவி கலந்து கொள்ள இருப்பது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் முதல் ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தான்? இணையத்தில் லீக்கானது லிஸ்ட்

அது மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி மூன்றாவது போட்டியாளராக பங்கேற்கிறார். நான்காவது போட்டியாளராக பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் மற்றும் ஐந்தாவது போட்டியாளராக விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியான டிடி பங்கேற்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.