4th Test Match Draw
4th Test Match Draw

4th Test Match Draw – இந்தியா ஆஸ், அணிகளுக்கு இடையே நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் மழை குறிக்கிடவே ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஆஸ்., இந்தியா இடையே 4-வது மற்றும் கடைசி பெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து ஆல் அவுடாகியது.

31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆனது இந்த டெஸ்ட் போட்டியில் தான் என்பது குறிப்பிட தக்கது.

இந்த நிலையில் 322 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது.

இதனால் ஆஸ், தொர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது, 2-வது செசனில் தேனீர் இடைவேளைக்கு பிறகு போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்த காரணத்தால் ஆஸ், இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் எதுவும் இழக்காமல் 6 ரன்கள் எடுத்து இருந்தது, சரியாக விளையாட முடியாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

கடைசி நாளான இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு போட்டி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில், மைதானத்தை சோதித்த நடுவர்கள் போட்டி கைவிடப்பட்டது என அறிவிக்கப்பட்டது.

இதனால் கடைசி போட்டி டிராவில் முடிந்தது. மற்றும், 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்த இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்து உள்ளது.

72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

புஜாரா ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.