இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் ஓட்டு நிலவர அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் ரேகா, வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி என மூவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நான்காவது வெளியேற்றத்தில் காண நாமினேஷன் நேற்று நடந்து முடிந்தது. இதில் சிவானி, ரம்யா, பாலாஜி, அர்ச்சனா, சுசித்ரா, கேப்ரெல்லா மற்றும் ஆஜித் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆஜித் அல்லது அர்ச்சனா தான் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஜித் இருமுறை நாமினேஷனில் இடம் பெற்றிருந்தார். ஒருமுறை எவிக்ஷன் ஆனார்.
ஆனால் அப்போது அவரிடம் எவிக்ஷன் ப்ரீ பாஸ் இருந்ததால் வெளியேற்றத்தில் இருந்து தப்பிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.