பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நான்காவது போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

4th Contestant of BB Ultimate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளர் இவர் தான்.. வெளியான வீடியோ

இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் பங்கேற்க உள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளர் இவர் தான்.. வெளியான வீடியோ

இதுவரை சினேகன், ஜூலி மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் பங்கேற்க இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தொடர்ந்து அடுத்த போட்டியாளராக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பது யார் என்பது குறித்த க்ளூ வீடியோ வெளியாகியுள்ளது.

கையில கரண்டி, கிச்சன் துணி, வத்திப்பெட்டி ஆகியவற்றை வைத்துக் கொண்டு இருப்பார் என மணிமேகலை க்ளூ கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அவர் வேறு யாருமில்லை சுரேஷ் சக்கரவர்த்தி தான் என கண்டுபிடித்து அவரது புகைப்படத்தை கமெண்ட்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.