4 Days Collection of Maanadu

மாநாடு திரைப்படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

4 Days Collection of Maanadu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மாநாடு.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, கருணாகரன், யோகி பாபு என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

வேலூரில் ஒரே நாளில் 7 முறை நில அதிர்வு : வீட்டை விட்டு வெளியேறினர் மக்கள்..

முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 14 கோடி வசூல் செய்த இந்தப் படம் இரண்டு நாளில் 22 கோடி வசூல் செய்தது. இந்த நான்கு நாள் முடிவில் படம் மொத்தமாக 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மழையில எப்படியும் நீச்சல் அடிச்சுட்டு தான் வந்து இருப்பீங்க! – G.V.Prakash Kumar Speech | HD

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு வெளியானாலும் பாக்ஸ் ஆபீசை திணற வைத்து வருவதாக கூறி வருகின்றனர்.