நான்கு நாள் முடிவில் டான் படத்தின் தமிழக வசூல் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
4 Days Collection of Don in Tamilnadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஆரம்பம் முதலே இந்த படத்தை பலரும் கொண்டாடி வருவதால் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது. அதன்படி இந்த திரைப்படம் நான்கு நாள் முடிவில் தமிழகத்தில் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
படம் வெளியான முதல் வாரத்தில் இத்திரைப்படம் 33 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. படத்தின் பட்ஜெட் 40 கோடியை இத்திரைப்படம் வெகுவிரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் டான் திரைப்படம் படக்குழுவினருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் படமாக அமைந்துள்ளது.