துருவ் விக்ரமின் மூன்றாவது படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

3rd Movie Update of Dhruv Vikram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய ஒரே மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சியான் 60 என்ற படத்தில் தன்னுடைய அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து துருவ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார. இது விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படமும் என கூறப்பட்டு வருகிறது.

திருப்பதியில்,13 மற்றும் 22-ந்தேதி கருட வாகன சேவை உற்சவம்..

இந்த படங்களை தொடர்ந்து துருவ் விக்ரம் அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அறிமுக இயக்குனர் ஒருவர் கூறிய கதை துருவ்வுக்கு மிகவும் பிடித்து போனதால் அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara-க்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?? Shock-ஆன ரசிகர்கள்..! | Latest Trending | Tamil HD