3 Years Of AAA Celebration
3 Years Of AAA Celebration

சிம்புவின் நடிப்பில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் வெளியாகி மூன்று வருடம் ஆகியதை ட்ரெண்டிங்கில் கொண்டாடி வருகின்றனர்.

3 Years Of AAA Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் நடித்து ஹீரோவான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி இருந்த சிம்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு என்ற படத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனி ஒருவனாக சாதனை படைத்த ஜெயம் ரவி

இந்த நிலையில் இன்றோடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன.

தோல்வி படமாக இருந்தாலும் இப்படத்தில் சிம்புவிற்கு மாஸான காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதனால் சிம்பு ரசிகர்கள் ஃபேஸ்புக் ட்விட்டர் என அத்தனை சமூக வலைதள பக்கங்களிலும் #3YearsOfAAA என்ற ஹஸ்டேக் மூலமாக கொண்டாடி வருகின்றனர்.

இப்படம் சிம்புவிற்கு பெரிய சறுக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு பிறகு சிம்பு சினிமாவில் நடிக்க ரெட் கார்ட் போடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.