3 Point O

3 Point O : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் தான் 2.0.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசியவை ” 2.O திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார் கடுமையாக உழைத்து நடித்தனர்.

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கிளைமேக்சில் நடித்தார் ரஜினி. நல்ல கதை அமைந்தால் 3.0 திரைப்படம் எடுக்க வாய்ப்பு உள்ளது “என பேசினார்.

விழாவில் இசையமைப்பாளர் A .R ரஹ்மான் பேசியவை : ” ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.அவரது கடின உழைப்பு இந்த வயதிலும் கூட.அதனால் தான் அவர் சூப்பர்ஸ்டார் என புகழ்ந்து பேசினார்,

விழாவில் அக்‌ஷய் குமார் அவர்கள் பேசியவை :

ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் உடன் 2.0 படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி, உங்கள் அன்பிற்கு நன்றி என நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் பேசினார்.

விழாவில் எமி ஜாக்சன் பேசியவை :

இந்திய சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி. வாய்ப்பளித்த ஷங்கர் அவர்களுக்கு நன்றி என பேசினார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.