தீபாவளி தினத்தில் வெளியாகும் படங்கள் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு மூன்று படங்களாவது ரிலீஸ் ஆவது வழக்கம். அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்கள் என்றால் ரிலீஸ் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

அந்த வகையில் வரும் தீபாவளி தினத்தில் வெளியாக உள்ள படங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளியாகிக் கொண்டே உள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் இந்த படமும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தீபாவளி ரேசில் மூன்று படங்கள் மோத இருப்பது உறுதியாகி உள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த மூன்று படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்ட் பண்ணுங்க.