திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் யானை படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகமாகி தன்னுடைய திறமையால் இன்று தனக்கென தனியிடம் பிடித்துள்ளார்.

மாஸ் காட்டும் யானை.. மூன்று நாள் முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்த அருண் விஜய் முதல் முறையாக இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைத்து நடித்து வெளியான திரைப்படம் தான் யானை. இந்த படத்தில் அருண் விஜய் உடன் அம்மு அபிராமி, பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் என பலர் இணைந்து நடித்திருந்தனர்.

மாஸ் காட்டும் யானை.. மூன்று நாள் முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் முதல் நாளில் மூன்று கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் மூன்று நாள் முடிவில் மொத்தம் ஒன்பது கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படம் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்று இருப்பதால் பட குழுவினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.